1. Home
  2. தமிழ்நாடு

ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற ஐடி ரெய்டில் ரூ.16 கோடி பறிமுதல்..!

1

ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்கள் மற்றும் சவிதா மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை என சோதனை நடத்தினர். ஜெகத்ரட்சகனின் வீடு , கல்வி நிறுவனங்கள் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 3 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில்  ரூ.2.50 கோடி சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல நிறுவனங்களில் ஜெகத்ரட்சகன் முதலீடு செய்துள்ளதாகவும், அதற்கு முறையாக வரி செலுத்தவில்லை என்று கூறி அதன் அடிப்படையிலேயே வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. 

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்புள்ள இடத்திலிருந்து ஏற்கனவே ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இப்போது மேலும் ரூ.2.5 கோடி சிக்கியுள்ளது. அதேபோல் சவிதா கல்விக்குழுமம் தொடர்புடைய இடங்களிலிருந்து ஏற்கனவே ரூ.10 கோடியும் இப்போது கூடுதலாக ரூ.2 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. 

Trending News

Latest News

You May Like