அதிர்ச்சி! தமிழகத்தில் ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை!

அதிர்ச்சி! தமிழகத்தில் ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை!

அதிர்ச்சி! தமிழகத்தில் ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை!
X

சென்னை பூந்தமல்லியில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு கொண்டு செல்லப்பட்ட 15 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை விவகாரத்தில், தனிப்படை போலீசார் மத்திய பிரதேசம் விரைந்துள்ளனர்.

சென்னை பூந்தமல்லியில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் கண்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்டது. அந்த லாரி நேற்று அதிகாலை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த மேலுமலை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் மற்றொரு லாரியில் வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல், லாரியை திடீரென வழிமறித்து, டிரைவர்களை தாக்கியது. அவர்களது கை, கால்களை கட்டி சாலையோர புதரில் போட்டு விட்டு கண்டெய்னர் லாரியை கடத்தி சென்றனர்.

இந்த நிலையில் புதரில் கிடந்த டிரைவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் நடத்திய விசாரணையில், கண்டெய்னர் லாரியில் 14,576 செல்போன்கள் இருந்ததாகவும், அதன் மதிப்பு சுமார் ரூ.15 கோடி என்றும் தெரிய வந்தது.

மேலும், கைரேகை நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன், சேலம் சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் மற்றும் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து, கொள்ளையர்களை பிடிக்க, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினரின் முதல்கட்ட விசாரணையில் முக்கியத்துப்பு கிடைத்தது. அதன் பேரில் குற்றவாளிகள் மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. இதனையடுத்து, செல்போன்களை கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் மத்திய பிரதேசம் விரைந்துள்ளனர்.

Next Story
Share it