1. Home
  2. தமிழ்நாடு

ஒரே நாளில் சவரனுக்கு 1,160 ரூபாய் குறைவு.. இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

1

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 145 ரூபாய் குறைந்து, ரூ.6,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 1,160 ரூபாய் குறைந்து, ரூ.53,600-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,607-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 119 ரூபாய் குறைந்து, ரூ.5,488-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 89,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 2,500 ரூபாய் குறைந்து, ரூ.86,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.86.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like