கெட்டுப்போன பீடாவுக்கு ரூ.10,247 இழப்பீடு!

சென்னையில் கடந்தாண்டு மே மாதம் முத்துராஜா என்பவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த பிரியாணியுடன், கெட்டுப்போன பீடா வந்ததாக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ₹10,247 இழப்பீடாக பெற்றுள்ளார்.
கெட்டுப்போன பீடாவில் இருந்த புழுக்கள், பிரியாணிக்கும் பரவியதாக முத்துராஜா தகவல். வழக்கில் தொடர்புடைய ஆர் ஆர் பிரியாணி மற்றும் ஸ்விக்கி நிறுவனங்கள் இணைந்து இந்த தொகையை செலுத்த நீதிபதி உத்தரவு