1. Home
  2. தமிழ்நாடு

“தக்காளியை பாதுகாக்க ரூ.10,000 சம்பளம்” : பிரியாணி கடையின் விளம்பரம்!!

“தக்காளியை பாதுகாக்க ரூ.10,000 சம்பளம்” : பிரியாணி கடையின் விளம்பரம்!!


தக்காளி, கேஸ் சிலிண்டரை பாதுகாக்க ஆட்கள் தேவை என்றும், 10,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படும் எனவும் தொப்பி வாப்பா பிரியாணி கடை சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இரண்டு வாரங்களாக பெய்த கனமழை காரணமாக தமிழ்நாட்டிற்கு தக்காளி வரத்து குறைந்து ஒரு கிலோ ரூ.150க்கு மேல் விற்கப்பட்டது. பின்னர், மாநிலங்களில் மழை குறைந்ததை அடுத்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.

தற்போது ரூ.40 வரை தக்காளி விலை குறைந்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீண்டும் தக்காளி விலை உயருமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது.

அதேபோல், மத்திய அரசு தொடர்ச்சியாக சிலிண்டர் விலையை உயர்ந்து வருகிறது. இதனால் வர்த்தக சிலிண்டர் விலை ரூ. 2 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இது சிறு நிறுவனங்கள், கடைகள், மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தக்காளியை பாதுகாக்க ரூ.10,000 சம்பளம்” : பிரியாணி கடையின் விளம்பரம்!!

இந்நிலையில், தக்காளி பெட்டியையும், கேஸ் சிலிண்டரையும் பாதுகாக்க அனுமதியுடன் துப்பாக்கி வைத்துள்ள security தேவை என தொப்பி வாப்பா பிரியாணி கடை விளம்பரம் செய்துள்ளது.

அந்த விளம்பரத்தில், தக்காளி பெட்டியையும், கேஸ் சிலிண்டரையும் பாதுகாக்க license உடன் gun man security guard வேலைக்கு ஆட்கள் தேவை. ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு முன்னுரிமை. மாத ஊதியம் ரூ.10 ஆயிரம். தங்கும் இடம் உணவு இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தொப்பி வாப்பா பிரியாணி கடையின் இந்த வேலைவாய்ப்பு விளம்பரத்தை நெட்டிசன்கள் பலரும் சமூகவலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like