1. Home
  2. தமிழ்நாடு

ரூ.10,000 கோடி ஒப்பந்தம்… 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு! எடப்பாடி அதிரடி!!

ரூ.10,000 கோடி ஒப்பந்தம்… 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு! எடப்பாடி அதிரடி!!


முதல்வர் பழனிச்சாமி தலைமையில் ரூ.10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்தில் புதிய தொழில்கள் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

14 புதிய கம்பெனிகள் தொழில் தொடங்க முதலீடு செய்துள்ளன. இதன் மூலம் 9 மாவட்டங்களில் 7 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்க பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், திருப்பூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 14 தொழில் நிறுவனங்கள் புதிய முதலீட்டுத் திட்டங்களை 10,055 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் ஆறு மாதங்களில் இந்திய அளவில் மிக அதிக முதலீடுகளை ஈர்த்த முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் வரை, 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 31,464 கோடி ரூபாய் முதலீடுகளுக்குக் கையெழுத்திடப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக, 14 புதிய தொழில் திட்டங்களை, தமிழ்நாட்டில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதன்மூலம் மக்கள் பெரும் பயன் அடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like