ரூ.1,000 மகளிர் தொகை.. குட் நியூஸ் சொன்ன முதல்வர் ஸ்டாலின்..!

தஞ்சாவூரில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள முதலமைச்சர், நேற்று மாலை கல்லணையை திறந்து வைத்தார். தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில், இன்று காலை தஞ்சை அரசு சரபோஜி கல்லூரியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மாமன்னன் இராஜராஜன் ஆட்சி செய்த இந்த மண்ணில் சுவாசிக்கும் போதே கம்பீரமாக உணர்கிறேன். விவசாயிகள் மகிழ்ச்சி அடைய முக்கிய அறிவிப்பை வெளியிட போகிறேன். அந்தவகையில் 82.75 லட்சம் குறுவை தொகுப்பு திட்டம் இந்தாண்டு அறிவிக்கிறேன். 56000 விவசாயிகள் குறுவை தொகுப்பு திட்டம் வழங்கப்படுகிறது. 36 மாவட்டத்தில் 8 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள்.” என்றார்.
தமிழ்நாடில் மகளிர் உரிமை, புதுமை பெண், காலை உணவு, விவசாயிகள் பயிர் காப்பீடு, இலவச மின் இணைப்பு உள்ளிட்ட திட்டங்களைப் பார்த்து எடப்பாடி பழனிசாமி புலம்பி கொண்டு இருக்கிறார். எந்த தகவல் தெரியாமல் அறை வேக்காட்டு தனமாக அறிக்கை விட்டு கொண்டு இருக்கிறார்” என மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், " ஜூலை 15 முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் எனவும் அந்த முகாமில் மகளிர் உரிமை திட்டத்தில் விடப்பட்ட மகளிர் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்தார்.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கி வருகிறது. இந்நிலையில், புதிய விண்ணப்பதாரர்கள் மற்றும் விடுபட்டவர்கள் வரும் ஜூலை 15ம் தேதி முதல் முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தன்னார்வலர்கள் வீடுகளுக்கே வந்து விண்ணப்பிக்க தேவையான உதவிகளை வழங்குவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்காக மாநிலம் முழுவதும் 10,000 இடங்களில் முகாம் நடைபெறுகிறது.
முன்னதாக இன்று காலை தஞ்சாவூரில் உள்ள முதல்வர் மருந்தகத்தின் செயல்பாடுகள் குறித்து பணியாளர்களிடம் காரிலிருந்தபடியே கேட்டறிந்தார். மருந்துகளின் இருப்பு நிலை, வழங்கும் நடைமுறை, மற்றும் பொதுமக்கள் வருகை குறித்து பணியாளர்களிடம் நேரடியாக விவரங்களை முதலமைச்சர் கேட்டறிந்தார்.