1. Home
  2. தமிழ்நாடு

1000 கோடி ரூபாய் முறைகேடு : தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு..!!

Q

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தது, பார் உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது.

இதுதொடர்பாக, கடந்த 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த 41 வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தினர்.

சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

இந்த வழக்குகளை சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த வெங்கடாசலபதி என்ற வழக்கறிஞர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (மே 22) நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமி நாதன், லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, '' சிபிஐ., விசாரணை கோரிய வழக்கு முடிவுக்கு வரும் வரை, டாஸ்மாக் முறைகேடு தொடர்பான முதல் தகவல் அறிக்கைகள் எதையும் முடித்து வைக்க மாட்டோம் என்று தமிழக லஞ்ச ஒழிப்பு துறை உத்தரவாதம் அளிக்குமா? என்று தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ராமனிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அட்வகேட் ஜெனரல், 'உள்துறை செயலாளரிடம் வழக்கு எதையும் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறேன்' என்று கூறினார். அதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.இதையடுத்து, இந்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யவும், வழக்கு மீதான விசாரணையை அடுத்த 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Trending News

Latest News

You May Like