ரூ. 904 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு டெண்டர்..!
தூத்துக்குடி மாவட்டம், முல்லக்காடு கிராம பகுதியில் ரூ. 904 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.
நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் ஆலையை அரசு தனியார் பங்களிப்பு முறையில் அமைக்க இந்த டெண்டர் கோரப்பட்டுள்ளது.மழை பொய்த்த காலத்தில் குடிதண்ணீர் பிரச்சனையை சமாளிக்கும் வகையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.