1. Home
  2. தமிழ்நாடு

ஆண்டுக்கு ரூ. 50,000 முதலீடு...வட்டி மட்டுமே ரூ. 6 லட்சத்துக்கு மேல் கிடைக்கும்..

1

ஸ்டேட் வங்கியில் அரசசாங்க திட்டமாக PPF உள்ளது. பாதுகாப்பான மற்றும் சிறந்த வருமானம் தரும் திட்ட்டமாக இது உள்ளது. ஸ்டேட் வங்கியின் (SBI) PPF திட்டத்தில் தற்போது 7.1 சதவீத வட்டி வழ்ங்கப்படுகிறது. குறைந்தபட்சமாக ஆண்டுக்கு 500 ரூபாய் மட்டும் முதலீடு செய்து, இத்திட்டத்தில் கணக்கை ஆரம்பிக்கலாம்.


வருடாந்திர முதலீட்டுக்கு அதிகபட்ச வரம்பாக ஒன்றரை லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. PPF திட்டத்தில் 15 வருடங்கள் பணத்தை டெபாசிட் செய்யலாம். முதலீட்டாளர் விரும்பினால் மேலும் ஐந்தாண்டுகள் நீட்டித்து கொள்ளும் வசதியும் உள்ளது. அத்துடன் 15 வருட முதலீட்டில் கடன் பெறும் வசதி உள்ளது இத்திட்டத்தின் சிறப்பம்சமாக இருக்கிறது.


இந்திய அரசாங்கத்தால் மையப்படுத்தப்பட்ட பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் மூலம் வழங்கப்படும் முதலீட்டுத் திட்டமாக பொது வருங்கால வைப்பு நிதி (PPF) உள்ளது. நிதி அமைச்சகத்தால் கடந்த 1968 ஆம் ஆண்டு நிதி அமைச்சகத்தின் தேசிய சேமிப்பு நிறுவனத்தால் துவங்கப்பட்ட, PPF திட்டத்திற்கு வழங்கப்படும் வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டிலும் அரசாங்கத்தால் நிர்ணயம் செய்யப்படுகிறது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கை அல்லாதவர்கள் பிபிஎஃப் கணக்கைத் திறந்து சேமிக்கலாம்.


உதாரணமாக எஸ்பிஐ பிபிஎஃப் திட்டத்தில் ஒருவர் ஆண்டுக்கு ரூ. 50,000 முதலீடு செய்யும் போது, 15 ஆண்டுகளில் மொத்த டெபாசிட் தொகை ரூ. 7,50,000 ஆக இருக்கும். இந்த திட்டத்திற்கு வழங்கப்படும் 7.1 சதவீத வட்டி விகிதத்தின் படி, 15 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 13,56,070 மொத்த தொகையாக கிடைக்கும். வட்டியாக மட்டுமே இத்திட்டத்தில் ரூ. 6 லட்சத்துக்கு மேல் முதலீட்டாளர் பெறலாம்.

Trending News

Latest News

You May Like