தமிழகத்தில் இனி ₹10 லட்சம் அபராதம்..!

தமிழக சட்டசபை இன்று கூடியது. அப்போது தமிழகத்தில் மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை பேரவையில் அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார். இந்த சட்டத்தால் கள்ளச்சாராயம், போதை பொருள் விற்பனை செய்வோருக்கு தண்டனையை கடுமையாக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் . அத்துடன் ரூ 10 லட்சம் அபராதமும் விதிக்கும் கள்ளச்சாராயம் காய்ச்சும் போது பிடிபட்டால் அசையும் சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும் வகையில் இந்த திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.