உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு..!

மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள புதுடெல்லி ரயில் நிலையத்தில் இருந்து பிரயாக்ராஜுக்கு இயக்கப்படும் பயணிகள் விரைவு ரயில், இரவு 10 மணியளவில் நடைமேடை 14-ல் புறப்பட தயாராக நின்றிருந்தது.
அந்த நேரத்தில் ஏராளமான பயணிகள் 14 ஆவது நடை மேடையில் நின்றிருந்தனர். பயணிகள் காத்திருந்த அந்த நேரத்தில் ஸ்வதந்திரா சேனானி விரைவு ரயிலும், புவனேஷ்வர் ராஜ்தானி ரயில்களும் தாமதாக இயக்கப்படுவதாக ரயில் நிலையத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பின் காரணமாக ரயில் நிலையத்தில் காத்திருந்தவர்கள், பிரயாக்ராஜ் விரைவு ரயிலில் ஏற ஒரே நேரத்தில் முண்டியடித்தனர். இதனால் நடைமேடை 13 மற்றும் 14-ஆம் நடைமேடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இந்த அறிவிப்பின் காரணமாக ரயில் நிலையத்தில் காத்திருந்தவர்கள், பிரயாக்ராஜ் விரைவு ரயிலில் ஏற ஒரே நேரத்தில் முண்டியடித்தனர். இதனால் நடைமேடை 13 மற்றும் 14-ஆம் நடைமேடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் ரயில்வே ஊழியர்கள் திணறிய நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் அடுத்தடுத்து மயங்கினர். நெரிசலில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலர் அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். அங்கு சென்ற தீயணைப்புதுறையினர் மற்றும் ரயில்வே காவலர்கள் நடைமேடையில் இருந்த பயணிகளை வெளியேற்றினர்.
இந்நிலையில் புது டெல்லி ரயில் நிலையத்தில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் விபத்துக்கான சரியான காரணத்தை கண்டறிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.