1. Home
  2. தமிழ்நாடு

சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் பரிசு! அறிவிப்புக்கு ‘நச்’ பதில் அளித்த சூர்யா!!

சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் பரிசு! அறிவிப்புக்கு ‘நச்’ பதில் அளித்த சூர்யா!!


நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா கருத்து தெரிவித்ததை அடுத்து பாஜகவினர் மற்றும் இந்த முன்னணி அமைப்பினர் அவருக்கு எதிராக திரும்பிவிட்டனர்.

நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதால் அறிக்கை ஒன்றை வெளியிட்ட நடிகர் சூர்யா, மாணவர்களின் மருத்துவர் கனவில் தீ வைக்கும் நீட் தேர்வுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அந்த அறிக்கையில், கொரோனா காலத்தில் உயிருக்கு பயந்து காணொலி மூலம் வழக்குகளை நடத்தும் நீதிமன்றம், மாணவர்களை தேர்வெழுத கூறுகிறது என குறிப்பிட்டிருந்தார்.

இந்த கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும், அதனால் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி சுப்ரமணியம், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹிக்கு கடிதம் எழுதினார்.

சூர்யா அகரம் அறக்கட்டளை மூலம் மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார் என்றும், அவரது கருத்தை பெரிதுபடுத்தாமல், பெருந்தன்மையுடன் விட்டுவிட வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதிகள் 10 பேர் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினர்.

இந்நிலையில், சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என தலைமை நீதிபதி தெரிவித்தார். மேலும், இதுபோன்ற கருத்துகளை கூறும் போது சூர்யா கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்து மக்கள் கட்சியின் துணை பொதுச்செயலாலர் தர்மா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷன் என்ற பெயரில் இடதுசாரிகளுடன் கூட்டணி குற்றச்சாட்டினார்.

மேலும் நடிகர் சூர்யாவை யாராவது செருப்பால் அடித்தால் அவர்களுக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று கூறியதாகவும் தெரிகிறது. அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவற்கு நடிகர் சூர்யா நச்சென்று பதில் அளித்துள்ளார்.

என்னை அடிப்பதால் ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும் என்றால் அந்த வாய்ப்பை ஏழை மாணவனுக்கு வழங்க தயார் என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like