நிரூபித்தால் பாஜக அண்ணாமலைக்கு ரூ.1 கோடி பரிசு.. வேதனையில் விவசாயிகள் சவால் !
நிரூபித்தால் பாஜக அண்ணாமலைக்கு ரூ.1 கோடி பரிசு.. வேதனையில் விவசாயிகள் சவால் !

ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை தொடர்ந்து மத்திய அரசின் நடவடிக்களுக்கு பாராட்டு தெரிவித்து வந்தார். இதன் காரணமாக அரசியலில் ஆர்வம் ஏற்பட்ட அண்ணாமலை, பணியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்ததன் மூலம் அரசியலில் குதித்தவர்.
அவர் கட்சியில் இணைந்த ஒரு சில நாட்களிலேயே அவருக்கு தமிழக பாஜக துணைத் தலைவர் பதவியும் தேடி வந்தது. மேலும் அண்ணாமலையை விரைவில் மாநிலங்களவை எம்பி-ஆக நியமனம் செய்ய பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாஜகவில் இணைந்த பிறகு தமிழகத்தில் அக்கட்சியை வளர்க்க அவர் தீவிரமாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அப்போது செல்லும் இடங்களில் எல்லாம் விவசாயிகளிடையே அவர் உரையாடி வருகிறார். இந்த நிலையில் விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கும், மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சமீபத்தில் விவசாயிகளிடம் அண்ணாமலை தெரிவித்தார்
அண்ணாமலையின் இந்த கருத்துக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அண்ணாமலைக்கு எதிராக சவால் விட்டு அவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.
அதாவது விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விவசாயிகளிடம் அண்ணாமலை நிரூபித்து விட்டால் அவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சவால் விடுத்துள்ளனர்.
மேலும் அண்ணாமலை விவசாயிகள் மத்தியில் நடித்து வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அண்ணாமலைக்கு விவசாயிகள் விடுத்துள்ள சவாலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
newstm.in