1. Home
  2. தமிழ்நாடு

ஆஸ்கர் மேடையில் மீண்டும் கெத்து காட்டிய ‘ஆர்ஆர்ஆர்’!

1

ராஜமவுலி இயக்கத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜய் தேவ்கன் உட்பட பலர் நடித்த திரைப்படம் ‘ஆர் ஆர் ஆர்’. சுதந்திரப் போராட்ட வீரர்களான சீதாராம ராஜு, கொமரம் பீம் ஆகியோரின் நட்பை மையமாகக் கொண்டு உருவான இந்தப் பீரியட் படத்துக்கு கீரவாணி இசை அமைத்திருந்தார். வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த பாடலுக்கான விருதை சமீபத்தில் வென்றது.

பல்வேறு விருதுகளைப் பெற்று வரும் இப்படம் ஆஸ்கர் விருதுக்கும் அனுப்பப்பட்டது. அதன்படி, ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘‘நாட்டு நாட்டு’’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. சிறந்த ஒரிஜனல் பாடல் பிரிவில் இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கர் விருதை வென்றார். அப்போது ராஜமவுலி, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், இந்த வருடமும் ஆஸ்கர் விழா மேடையில் உலக சினிமாக்களின் சிறந்த ஸ்டண்ட் காட்சிகளுக்கான ட்ரிப்யூட்டாக காணொளி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அதில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் இரண்டு ஸ்டண்ட் காட்சிகளும், ‘நாட்டு நாட்டு’ பாடலும் இடம் பெற்றிருந்தது ஹைலைட். இதைக் குறிப்பிட்டு படக்குழுவினர் தங்களது மகிழ்ச்சியையும், அகாடெமிக்குத் தங்களது நன்றியையும் தெரிவித்துள்ளனர்.


 

Trending News

Latest News

You May Like