ராயல் என்ஃபீல்டு விலை உயர்கிறது..! எவ்வளவு தெரியுமா?

புல்லட் 350 பைக்கை பல்வேறு வேரியன்ட்களாக விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம். வேரியன்டிற்கு ஏற்ப பிரேக்குகள், நிறங்கள், லைவரி மற்றும் கேஸி ஆகியவற்றில் மாற்றங்கள் இருக்கும். அடிப்படை வேரியன்டில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், டாப் எண்டில் டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி கொடுக்கப்பட்டிருக்கும்.
பட்டாலியன், மிலிட்டரி, ஸ்டாண்டர்டு மற்றும் பிளாக் கோல்டு என நான்கு வேரியன்ட்களாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது புல்லட் 350.
பட்டாலியன் வேரியன்டே அடிப்படையான வேரியன்டாக இருக்கிறது. இந்த வேரியன்டானது கருப்பு நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. 'பழைய' புல்லட்டைப் போலான டிசைன் அம்சங்களைக் கொண்ட பைக் பட்டாலியன் பிளாக். இந்த வேரியன்டின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ரூ.1.75 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது, இனியும் விற்பனை செய்யப்படவிருக்கிறது.
மில்லிட்டரி தான் அடிப்படை வேரியன்ட். பிளாக் மற்றும் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது இந்த வேரியன்ட். இதன் விலை ரூ.2,000 வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. இனி ரூ.1.75 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படவிருக்கிறது இந்த வேரியன்ட்.
ஸ்டாண்டர்டு வேரியன்டின் விலை ரூ.3,000 வரை உயர்த்தியிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. பிளாக் மற்றும் மரூன் என இரண்டு நிறங்களில் ரூ.2 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இனி விற்பனை செய்யப்படவிருக்கிறது இந்த வேரியன்ட்.
டாப் எண்டான பிளாக் கோல்டின் விலையையும் ரூ.2,000 வரை உயர்த்தியிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. இனி இந்த வேரியன்டானது ரூ.2.18 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படவிருக்கிறது.
ராயல் என்ஃபீல்டின் பிற 350 சிசி பைக்குகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே J சீரிஸ் இன்ஜின் தான் இந்த புல்லட் 350-யிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2023-ல் தான் முந்தைய UCE இன்ஜினுக்கு மாற்றாக புதிய இன்ஜினைக் கொடுத்து அப்டேட் செய்தது ராயல் என்ஃபீல்டு. J சீரிஸ் இன்ஜினை கடைசியாகப் பெற்ற ராயல் என்ஃபீல்டு பைக் புல்லட் 350 தான்.
சிங்கிள் சிலிண்டர் கொண்ட இந்த 349 சிசி ஏர்-கூல்டு இன்ஜினானது, 20.2 hp பவர் மற்றும் 27 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கிறது.