கூட்டாளியின் மனைவியை உல்லாசத்திற்கு அழைத்த ரவுடி.. ஆத்திரத்தில் கணவன்.. !!

விழுப்புரம் அருகே கோட்டக்குப்பம் போலீஸ் சரகம் சின்னமுதலியார் சாவடியை சேர்ந்த மணவாளன் (வயது 27), அப்பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்துள்ளார்.
திருமணமாகாத மணவாளன் மீது கோட்டக்குப்பம், புதுவை உள்ளிட்ட காவல் நிலையங்களில் 2 கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் ரவுடி மணவாளன் அவரது குடியிருப்பு பகுதி அருகே ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த விரைந்த போலீசார் சடலமாக கிடந்த ரவுடி மணவாளனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் கொலை செய்யப்பட்டது குறித்த விசாரணைல் போலீசார் இறங்கினர்.
அப்போது, கொலை செய்யப்பட்ட பகுதியான சின்ன முதலியார் சாவடியை சேர்ந்த மற்றொரு ரவுடி ஆனந்த் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
கைதான ஆனந்த், கொலை செய்யப்பட்ட மணவாளன் ஆகிய 2 பேரும் அந்த பகுதியில் ரவுடிகளாக வலம் வந்துள்ளனர். இவர்கள் கொலை உள்ளிட்ட பல்வேறு கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் இருவரும் ஆனந்த் வீட்டிற்கு அடிக்கடி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஆனந்தின் மனைவி மீது மணவாளன் ஆசை கொண்டுள்ளார்.
இதனால் ஆனந்த் இல்லாத நேரம் பார்த்து அவ்வப்போது வீட்டிற்கு செல்லும் மணவாளன், அவரது மனைவியை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் இது குறித்து தனது கணவரிடம் கூறியுள்ளார்.
ஆத்திரம் அடைந்த ஆனந்த் நேரடியாக மணவாளனிடம் சென்று இது குறித்து எச்சரித்தார். இதனால் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. ஆனாலும் மணவாளன், ரவுடி ஆனந்த் மனைவியின் செல்போன் எண்ணை தெரிந்து கொண்டு அடிக்கடி செல்போனில் பேசி செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளார்.
இது ஆனந்துக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்த, தனது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து மணவாளனை அவர் தீர்த்துகட்டினார். கொலை செய்வதற்கு மன்பு மது அருந்துவோம் என கூறி மணவாளனை தனியாக அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது என் மனைவியுடன் நீ பேசக்கூடாது என ஆனந்த் கூறியப்போது வாக்குவாதம் ஏற்பட்டதால், ஆனந்த் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை கத்தியால் குத்தியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தனர். இவ்வாறு கைதான மூன்று பேரும் வாக்குமூலம் அளித்துள்ளனர் என போலீசார் கூறுகின்றனர்.
newstm.in