அடுத்தடுத்து சாதனை படைக்கும் ரவுடி பேபி பாடல்.. இப்போ என்ன சாதனை தெரியுமா?

தென்னிந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல் என்ற புதிய சாதனையை மாரி 2 படத்தின் ரவுபி பேபி பாடல் படைத்துள்ளது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் - சாய் பல்லவி நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மாரி 2'. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
படத்தைப்போன்றே பாடல்களுக்கும் ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர். குறிப்பாக ரவுடி பேபி பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்து மிகப்பெரும் வெற்றியை பெற்றது. துள்ளல் இசையுடன் தனுஷ்- சாய் பல்லவி அசத்தல் நடனத்துடன் இப்பாடல் பிரபலமானது.
யூடியூப்பில் அதிக நபர்களால் பார்க்கப்பட்டு வந்த இப்பாடல், தற்போது 90 கோடி பார்வைகளை கடந்து தென்னிந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல் என்ற சாதனையை படைத்துள்ளது.
இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனமான வொண்டர் பார் ஃபிலிம்ஸ் ட்விட்டரில் பகிர்ந்து, அன்பும் ஆதரவும் கொடுத்த ரவுடி பேபிகளுக்கு நன்றி என தெரிவித்துள்ளது. இன்னும் வலுவுடன் ஒரு பில்லியனை அடைவோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.‘
இதேபோன்று படத்தின் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜாவும் தனது முகநூல் பக்கத்தில் 900 மில்லியன் பார்வை போஸ்டரை பகிர்ந்துள்ளார்.
#Rowdybabyhits900million pic.twitter.com/ViNImcTCio
— Raja yuvan (@thisisysr) July 19, 2020