பழனி முருகன் கோயிலில் இன்று முதல் ரோப் கார் சேவை இல்லை..!!
திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் பழனி முருகன் கோயில் உலகளவில் பிரசித்திப் பெற்றதாகும். உள்ளூர் மக்கள், வெளி மாநில மக்கள் மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் பலரும் ஆண்டுதோன்றும் இந்த கோயிலுக்கு வருகின்றனர்.
பக்தர்களுக்கு மலை மீது இருக்கும் பழனி தண்டாயுதபாணியை தரிசிக்க படிப்பாதை, யானைப் பாதை, விஞ்ச், ரோப் கார் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் வழங்கப்படுகின்றன. படிப்பாதை அல்லது யானை பாதையில் செல்ல முடியாத பக்தர்கள் விஞ்ச் அல்லது ரோப் கார் மூலம் கோயிலுக்கு செல்லலாம்.
விஞ்ச்சில் செல்லும் போது 7 நிமிடங்களில் கோயிலை சென்றடைந்துவிட முடியும். அதுவே ரோப் காரில் சென்றால் பயண நேரம் வெறும் 3 நிமிடங்கள் தான். அதனால் பெரும்பாலான மக்கள் ரோப் கார் போக்குவரத்து சேவைக்கு தான் முன்னுரிமை கொடுப்பார்கள்.
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும் பொருட்டு, ஆண்டுதோறும் ஒவ்வொரு மாதமும் ரோப் கார் போக்குவரத்துக்கான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நடப்பாண்டு இன்று முதல் 19-ம் தேதி வரை ரோப் கார் சேவைக்கான பராமரிப்புப் பணிகள் நடக்கும்.
இதுதொடர்பாக பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் கம்பிவட உயர்தி சேவை (Rope Car) வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை 19.08.2023 முதல் ஒரு மாத காலத்திற்கு பக்தர்கள் பயன்பாட்டிற்கு இயங்காது. பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல மின்இழுவை இரயில் (Winch), படிப்பாதை மற்றும் யானைப்பாதை ஆகிய வழிகளை பயன்படுத்தி திருக்கோயில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.