1,118 மீட்டா் உயரத்தில் ரோப் கார்! ஜம்மு-காஷ்மீர் ஆலயங்களுக்கிடையே துவக்கம்!

தமிழகத்தில் பழனி மலை முருகனை தரிசிக்க மலை ஏற முடியாதவர்களுக்காக ரோப்கார் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதே போல் வட மாநிலங்களான ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற ஆலயங்களை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக முதல் முறையாக ரோப்கார் வசதி உருவாக்கப் பட்டுள்ளது.
இதன்படி முதல்கட்டமாக பாவே வாலி மாதா, மஹாமாயா ஆலயங்களுக்கு தற்போது ரோப் கார் சேவை தொடங்கப்பட்டுள்ளது. படிப்படியாக இந்த சேவை விரிவு படுத்தப்படும். இந்த ரோப் கார் கடந்து செல்லும் தூரம் 1.66கிமீ. இந்த ரோப்கார் சுமார் 1,118 மீட்டா் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.