1. Home
  2. தமிழ்நாடு

ரோமியோ ஓடிடி ரிலீஸ் தேதி இதோ…!

Q

நான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான விஜய் ஆண்டனி, அடுத்தடுத்து சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், யமன், அண்ணாதுரை, கொலைகாரன், கொலை, ரத்தம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனி நடிப்பில் ஹிட்லர், வள்ளி மயில், அக்னி சிறகுகள் ஆகிய திரைப்படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன

இதற்கிடையே, விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திரைப்படம் ரோமியோ. விநாயகர் வைத்தியநாதன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இதுவரை ஆக்ஷன் ஹீரோவாக நடித்து வந்த விஜய் ஆண்டனி இந்த படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக நடித்துள்ளார். இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிர்நாலினி ரவி நடித்திருக்கிறார். குட் டெவில் நிறுவனத்தின் சார்பில் விஜய் ஆண்டனி படத்தை தயாரித்துள்ளது.

கடந்த ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, வரும் மே மாதம் 10-ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Trending News

Latest News

You May Like