காதல் திருமணம்.. 3 மாதத்தில் தூக்கில் தொங்கிய கொடூரம்.. சிக்கிய பரபரப்பு கடிதம் !

ஈரோடு மாவட்டம் பவானி அருகே மல்லியூரை சேர்ந்த இளைஞர் இளங்கோவன். இவருக்கும் நாமக்கல் மாவட்டம் தோக்கவாடியை சேர்ந்த ரம்யாவும் காதலித்து வந்தனர். பின்னர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.
இதனையடுத்து இளங்கோவன் - ரம்யா ஜோடி மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கை சென்றதாக கூறப்படுகிறது. எனினும் அவர்களுக்குள் அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வழக்கம்போல் பணிக்கு சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பிய இளங்கோவன், வீட்டிற்கு வந்ததும் மனைவியை தேடியுள்ளார். ஆனால் ரம்யா தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில்சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மனைவி இறந்ததால் மனமுடைந்து தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வீட்டில் சத்தம், நடமாட்டம் இல்லாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது இளம்ஜோடி தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ரம்யா எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாகவும், இதனால் இளம்பெண் ரம்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
newstm.in