1. Home
  2. தமிழ்நாடு

சந்திரபாபு நாயுடு இவ்வளவு கீழ்த்தரமாக இறங்குவார் என நினைக்கவில்லை - ரோஜா..!

Q

முன்னாள் மந்திரி ரோஜா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சந்திரபாபு நாயுடு அரசியலுக்காக இவ்வளவு கீழ்த்தரமாக இறங்குவார் என நினைக்கவில்லை. ஏழுமலையானுக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் உள்ளனர்.
லட்டு பிரசாதத்தில் கலப்படம் உள்ளதாக கூறினால் எவ்வளவு பக்தர்களின் மனங்கள் பாதிக்கப்படும் என்பதை இந்த வயதிலாவது அவருக்கு தெரிந்து இருக்க வேண்டும்.
அரசியலை திசை திருப்புவதற்காக இது போன்று செய்து வருகிறார்.
ஏழுமலையான் கோவில் முன்பாக இருந்த வைக்கால் மண்டபத்தை இடித்ததால் கடவுள் அவருக்கு பலமான அடியை கொடுத்தார். அதன் பிறகாவது திருந்துவார் என நினைத்தால் திருந்துவதாக இல்லை.
சித்தூர் மாவட்டத்தில் தான் சந்திரபாபு நாயுடு பிறந்தார். நானும் பிறந்தேன். மீண்டும் கடவுளிடமே அரசியல் செய்கிறார். கடவுளே பார்த்து அவருக்கு தண்டனை கொடுப்பார்.இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like