1. Home
  2. தமிழ்நாடு

குவியும் வாழ்த்துக்கள்..!நற்செய்தி வெளியிட்ட ரோஹித் சர்மா - ரித்திகா தம்பதி..!

1

இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், ரோஹித் சர்மா மும்பையிலேயே இருந்து வந்தார்.  இதனிடையே ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா கர்ப்பமாக இருப்பதால், ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா செல்லவில்லை என்று கூறப்பட்டது.

கடந்த சில மாதங்களாகவே ரோஹித் சர்மாவுடன்  ரித்திகா எந்த பயணத்தையும் மேற்கொள்ளவில்லை. அதேபோல் மும்பை டெஸ்ட் போட்டியை காண வந்த போது ரித்திகா கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தம்பதியினர் இருவரும் 2வது குழந்தையை வரவேற்க தயாராகி வந்தது தெரிய வந்தது.

இந்த நிலையில் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரித்திகாவிற்கு ஆண் குழந்தை பிறந்திருப்பது தெரிய வந்துள்ளது.  இந்த தம்பதியினருக்கு 2015ஆம் ஆண்டு திருமணம் முடிவடைந்த நிலையில், 2018ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.  தற்போது ஆண்குழந்தை ஒன்றும் பிறந்திருப்பதால் அவரின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். 

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவுக்கு சென்று அதில் ரோஹித் கலந்துகொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

Trending News

Latest News

You May Like