தென் தமிழகத்தை கலக்கிய ராக்கெட் ராஜா இன்று ஜாமினில் விடுதலை!

நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த சாமிதுரை (26) என்பவர் கடந்த கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் சாமிதுரை கொலை வழக்கில் திடீர் திருப்பமாக தென் தமிழகத்தைச் சேர்ந்த பனங்காட்டுப்படை கட்சி தலைவரும் பிரபல ரவுடியுமான ராக்கெட் ராக்கெட் ராஜாவை கடந்த 2022 அக்டோபர் 7ஆம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நெல்லை மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்திருந்தனர்.
இதனை அடுத்து திருநெல்வேலி நீதிமன்றத்தில் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு பாதுகாப்பு நலன் கருதி அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தில், பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக கூறி திருநெல்வேலி கீழ்நிலை நீதிமன்றம் அந்த குண்டர் தடுப்பு சட்டத்தினை ரத்து செய்தது.
இதையடுத்து, 265 நாட்கள் சிறையில் இருந்த ராக்கெட் ராஜா, இன்று நீதிமன்ற உத்தரவின் படி விடுதலை செய்யப்பட உள்ள நிலையில், அவரை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் சென்னை புழல் சிறை வளாகம் முன்பு குவிந்த வண்ணம் உள்ளனர்.
இதனை அடுத்து சட்டம் ஒழுங்கு நலனை கருத்தில் கொண்டு, புழல் சிறை வளாகம் முன்பு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் இருக்க அதிரடி போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசாரம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து புழல் சிறை வளாகம் முன்பு குவிந்த அவரது ஆதரவாளர்களை, தனி பேருந்து மூலம் தனியார் திருமண மண்டபத்திற்கு அவர்களை அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளனர் காவலர்கள்.
யார் இந்த ராக்கெட் ராஜா
கொலை செய்யப்பட்ட சாமிதுரை தரப்பிற்கும் ராக்கெட் ராஜா தரப்பிற்கும் இடையே ஜாதி ரீதியாக பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில் சம்பவத்தன்று ராக்கெட் ராஜா திட்டப்படி சாமிதுரை கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே இந்த வழக்கில் கடந்த பல நாட்களாக நெல்லை மாவட்ட காவல்துறையினர் ராக்கெட்டு ராஜாவை தீவிரமாக தேடி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கைது செய்தனர்.
ஒரு காலத்தில் ரவுடிகள் சாம்ராஜியத்தில் கொடி கட்டி பறந்தவர். இவருக்கு சொந்த ஊர் நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த ஆனைக்குடியாகும்.
1990 கால கட்டங்களில் ஜாதி ரீதியான சண்டைகள் கட்டப்பஞ்சாயத்து அடிதடி என பல்வேறு சம்பவங்களில் ராக்கெட் ராஜா ஈடுபட்டு வந்தார். நாடார் சமுதாயத்தின் முக்கிய தலைவராக அறியப்படும் கராத்தே செல்வினின் சீடராக இருந்தார். பின்னாளில் வெங்கடேஷ் பண்ணையாரின் வலது கரமாக இருந்து வந்தார். அதன் பின்னர் அவரது மறைவுக்கு பிறகு சுபாஷ் பண்ணையாருடன் இணைந்து பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த பசுபதி பாண்டியன் கொலை வழக்கு, பேராசிரியர் செந்தில் குமார் கொலை வழக்கு என பல்வேறு கொலை வழக்குகளில் சந்தேகிக்கப்பட்டு மாநில அளவில் ரவுடிகள் பட்டியலில் முக்கிய இடம் பெற்றிருந்தார்.
ஸ்கெட்ச் போடுவதில் தொடங்கி செயலை முடிப்பது வரை ராக்கெட் வேகத்தில் செயல்படுவதால் இவரை ராக்கெட் ராஜா என்று அடைமொழியுடன் அழைத்து வந்தனர். இப்போதுள்ள இளைஞர்களுக்கு ராக்கெட் ராஜா பற்றி பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், 90 கிட்ஸ் இளைஞர்கள் ராக்கெட் ராஜாவை நன்கு அறிந்திருப்பார்கள். 90 கால கட்டங்களில் காவல்துறைக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்