1. Home
  2. தமிழ்நாடு

இனி தைராய்டு புற்றுநோய் பாதித்தவா்களுக்கு தழும்பில்லாத ரோபோடிக் சிகிச்சை..!

1

அப்பல்லோ மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை முதுநிலை நிபுணர் வெங்கட் கூறியதாவது:

தைராய்டு புற்றுநோய் பாதிப்புக்கு, அறுவை சிகிச்சை இல்லாத, 'ரோபோடிக்' சிகிச்சை அணுகுமுறை மேற்கொள்ளப்பட்டது. கழுத்தில், 4 மி.மீ., அளவுக்கு சிறிய வெட்டு செய்யப்பட்டு, 3டி தொழில்நுட்ப வசதிகளுடன், மிக துல்லியமாக குரல்வளை நரம்பு, பாராதைராய்டு சுரப்பிகளை பார்வையிட முடிந்தது. அதன் வாயிலாக தீங்கற்ற மற்றும் தழும்புகள் இல்லாமல், 8 செ.மீ., வரை உள்ள தைராய்டு சுரப்பி அகற்றப்பட்டது.
 

இந்த நடைமுறையில், 34 வயது மற்றும் 45 வயது நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. வருங்காலங்களில் அனைவருக்கும் பயன்படும் சிகிச்சை முறையாக இருக்கும்.
 

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவில் தைராய்டு புற்றுநோய் விகிதங்கள் கவலைப்படும் அளவிற்கு அதிகரித்து வருகின்றன. அதுவும் குறிப்பாக 30 வயதிற்கு குறைவான இளவயது நபர்களிடமும், பெண்களிடமும் இது அதிகமாக காணப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகள் கால அளவில் தைராய்டு புற்றுநோயின் நேர்வு பெண்களில் 62 சதவீதமும், ஆண்களில் 48 சதவீதமும் அதிகரித்திருக்கின்றன.

தைராய்டு புற்றுநோய்கள், சிகிச்சையின் மூலம் குணப்படுத்தக்கூடியவை. இதில் மிக முக்கியமான சிகிச்சையாக இருப்பது அறுவைசிகிச்சையும் மற்றும் அதைத்தொடர்ந்து வழங்கப்படும் கதிரியக்க அயோடின் சிகிச்சையாகவும் இருக்கின்றன. ரோபோடிக் தைராய்டக்டோமி என்பது, மிக குறைவான ஊடுருவல் உள்ள ஒரு மருத்துவ செயல்முறை.

அறுவை சிகிச்சை முறை?: இதில் கழுத்தில் எவ்வித தழும்புகளையும் உருவாக்காமல் தைராய்டு சுரப்பி நீக்கப்படும். இந்த அறுவை சிகிச்சைக்காக அக்குள் பகுதியில் 4 செ.மீட்டருக்கும் அதிகமில்லாத ஒரு சிறிய வெட்டு செய்யப்படும். ஆகவே தைராய்டு அகற்றலின் பொதுவான சிக்கல்களாக இருந்துவரும் குரலில் மாற்றம் மற்றும் இரத்தத்தில் இயல்புக்கு மாறாக குறைவான கால்சியம் அளவுகள் போன்றவற்றை குறைக்க முடியும்.

Trending News

Latest News

You May Like