1. Home
  2. தமிழ்நாடு

RM வீரப்பன் உடல் 78 குண்டுகள் முழங்க தகனம்!

1

எம்ஜிஆரின் அமைச்சரவையில் அறநிலையத் துறை போன்ற முக்கிய துறைகளுக்கு அமைச்சராக பதவி வகித்தார் ஆர்.எம்.வீரப்பன். தொடர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் அமைச்சராகப் பணியாற்றினார். அதிமுகவில் இருந்து ஆர்.எம்.வீரப்பன் நீக்கப்பட்ட பிறகு எம்.ஜி.ஆர். கழகம் என்ற கட்சியை நடத்தி வந்தார்.

அதன் பிறகு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடன் நெருக்கமாக இருந்தார். திமுகவுடன் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டார். இதையடுத்து, தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்தார் ஆர்.என்.வீரப்பன். இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக உடல்நலக் குறைவால் நேற்று காலமானார் ஆர்.எம்.வீரப்பன். அவருக்கு வயது 98. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது ஆர்எம் வீரப்பனின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

சென்னையில் உடல்நலக்குறைவால் நேற்று காலமான அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது. அவரது இல்லத்தில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையே, ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இது தொடர்பாக, தமிழக தலைமைச் செயலாளர் விடுத்த செய்திக் குறிப்பில், "5 முறை அமைச்சராகவும் மூன்று முறை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், 2 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய ஆர்.எம்.வீரப்பனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்த அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, ஆர்.எம். வீரப்பனின் உடல் இன்று மாலை 5 மணி அளவில் ஊர்வலமாக நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலம் மின் மயானம் சென்றடைந்ததும், நுங்கம்பாக்கம் மின் மயானத்தில் அவரது உடலுக்கு 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.


 

Trending News

Latest News

You May Like