1. Home
  2. தமிழ்நாடு

ஒன்றிய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த RLJP தலைவர்!

Q

பீகாரில் 17 தொகுதிகளில் பா.ஜ.கவும், 16 தொகுதிகளில் நிதிஷ்குமார் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடுகிறது. அதேபோல் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 5 இடமும் மற்ற 2 கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் ஒதுக்கப்பட்டு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் NDA கூட்டணியில் இருக்கும் ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சிக்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை. இதனால் அக்கட்சியின் தலைவர் பசுபதி பராஸ் பா.ஜ.க மீது கடும் அதிருப்தியிலிருந்து வந்தார். இவர் ஒன்றிய அமைச்சராகவும் இருந்து வந்தார். தற்போது ஒன்றிய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து தனது அதிருப்தியைப் பசுபதி பராஸ் வெளிப்படுத்தியுள்ளார். இதனால் பீகாரில் NDA கூட்டணிக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பசுபதி பராஸ், ராம் விலாஸ் பாஸ்வானின் உறவினராவார். கடந்த 2021 ஆம் ஆண்டு ராம் விலாஸ் பாஸ்வானுக்கு எதிராகக் கட்சிக்குள் கிளர்ச்சி செய்தார். பிறகு லோக் ஜனசக்தி கட்சியிலிருந்து விலகி ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சியை உருவாக்கினார். அப்போது பா.ஜ.க இவரை தன்பக்கம் இழுத்து ஒன்றிய அமைச்சர் பதவி கொடுத்தது

Trending News

Latest News

You May Like