பிரதமர் மோடி பொதுக்கூட்டங்களில் கீழ்த்தரமாக பேசி வருகிறார் : ஆர்ஜேடி தலைவர் விமர்சனம்..!
பிகார் மாநிலம் பாட்னாவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய மனோஜ் குமார் ஜா, பேசுகையில், பிரதமர் மோடி பொதுக்கூட்டங்களில் கீழ்த்தரமாக பேசி வருகிறார். அதனாலேயே அவர் தோல்வியை சந்திப்பார். தான் தோல்வியை சந்திக்கப்போகிறோம் என்பது தெரிந்துவிட்டதால்தான் மோடி தரம்தாழ்ந்த கருத்துகளை பேசி வருகிறார். ஒருவேளை, பொய் பேசுவதைக் கண்டறியும் இயந்திரத்தை, பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் வைத்துவிட்டால், மோடி பேசும் பொய்களைக் கேட்டு, அந்த இயந்திரமே நின்றுபோய்விடும் என்று தெரிவித்துள்ளார். எத்தனை பொய்கள்.. பொய்களை சொல்லிக்கொண்டே இருக்கிறார். இது ஒரு பிரதமரின் வேலையல்ல, இது ஒரு பிரதமர் பேசுவதற்கான அழகல்ல என்று தெரிவித்துள்ளார்.
அதானி, அம்பானி குறித்து பேசாமல் இருக்க காங்கிரஸ் கட்சி எவ்வளவு பணம் வாங்கியது என்பது போன்ற கருத்துகளை நேற்று முன்தினம் பிரதமர் மோடி பேசியிருந்த நிலையில், அதற்கு காங்கிரஸ் கட்சி சார்பிலும், ராகுல் மற்றும் பிரியங்கா சார்பிலும் கடும் பதிலடி கொடுக்கப்பட்ட நிலையில், நேற்று ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் இவ்வாறு பேசியிருக்கிறார்.