பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் பிரபல நடிகை..!!

தமிழ்த் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் பெரிதும் வரவேற்பு பெற்ற பாக்கியலட்சுமி தொடரில் இருந்து பிரபல நடிகை விலகவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் பாக்கியலட்சுமி. எப்போதும் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கும் இந்த சீரியல், தற்போது பின் தங்கியுள்ளது.
இதனால் சீரியல் தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்ட கதாபாத்திரங்களை மாற்றிட முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதன்படி எழில் மனைவி அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரித்திகா தமிழ்ச்செல்வி சீரியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவருக்கு பதிலாக காற்றுக்கென்ன வேலி தொடரில் நடித்துவரும் அக்ஷிதா அசோக் அமிர்தா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.