ரிதன்யா வழக்கு: மாமியார் ஜாமின் மனு விசாரணை ஒத்திவைப்பு..!
ஜூலை 28ஆம் தேதி சேலையூர் அருகே உள்ள மொண்டிபாளையம் பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த காரில் ரிதன்யா சடலமாக கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் விரைந்து வந்த காவல்துறையினர் ரிதன்யாவின் உடலை மீட்டு பிரதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.முதற்கட்ட விசாரணையில் ரிதன்யா தென்னை மரத்திற்கு தெளிக்கப்படும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.மேலும் ரிதன்யா போனை ஆய்வு செய்ததில் தற்கொலைக்கு காரணம் வரதட்சணை கொடுமை என்பது தெரியவந்தது. மேலும் ரிதன்யா தனது தந்தைக்கு ஆடியோ மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில் தன்னுடைய மாமியார் சித்ரா தேவி, மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் கணவர் மனதளவிலும் உடலளவிலும் கொடுமைப்படுத்தி யதாகவும், இதற்கு மேல் தன்னால் சகித்துக் கொள்ள முடியாது என்றும், தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக கூறி உள்ளார். மேலும் தன்னுடைய இறப்பிற்கு காரணம் மாமனார், மாமியார் மற்றும் கணவர் தான் என்று கூறினார் .கடைசியாக தன்னுடைய தந்தைக்கு என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து திருமணமான 78 நாட்களில் ரிதன்யா தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ரிதன்யா அளித்த மரண வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஈஸ்வரமூர்த்தி மற்றும் கணவர் கவின் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை சிறையில் அடைத்தனர்.