1. Home
  2. தமிழ்நாடு

உங்கள் பிஎஃப் பணத்திற்கு ஆபத்து? உடனே இந்த வேலையை செய்தால் தப்பிக்கலாம் !

உங்கள் பிஎஃப் பணத்திற்கு ஆபத்து? உடனே இந்த வேலையை செய்தால் தப்பிக்கலாம் !


அரசுத் துறையிலும் தனியார் நிறுவனங்களிலும் பணியாற்றும் பலர் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) அமைப்பில் பிஎஃப் சேமிப்பு கணக்கு வைத்திருப்பார்கள். பிஎஃப் பணத்தை எடுப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளன. பிஎஃப் கணக்கை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். அவ்வாறு இணைக்காமல் இருந்தால் பிஎஃப் பணத்தை எடுப்பதில் சிக்கல் ஏற்படும்.

இன்னும் நிறையப் பேர் தங்களது பிஎஃப் கணக்கில் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர். இதை இணைப்பதற்கு அரசு தரப்பில் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அந்த அவகாசம் இன்னும் சில நாட்களில் முடியப் போகிறது. ஆதாரை பிஎஃப் கணக்குடன் இணைக்க நவம்பர் 30ஆம் தேதி தான் கடைசி நாள். அதற்குள் இணைக்க வேண்டும். இல்லையெனில் பிஎஃப் பணத்தை எடுப்பதில் சிக்கல் ஏற்படலாம். எனவே கால அவகாசம் முடிவதற்குள் இணைத்துவிட்டால் நல்லது.

உங்கள் பிஎஃப் பணத்திற்கு ஆபத்து? உடனே இந்த வேலையை செய்தால் தப்பிக்கலாம் !

இவற்றை இணைப்பதற்கு நீங்கள் எங்கும் அலையத் தேவையில்லை. ஆன்லைன் மூலமாகவே இணைக்கலாம்.

பிஎஃப் அமைப்பின் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற வெப்சைட்டில் லாகின் செய்து ’manage' வசதியின் கீழ் உள்ள KYC ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதில் ஆதார் நம்பர் மற்றும் ஆதாரில் இருக்கும் உங்களது பெயரையும் பதிவிட்டு 'save' கொடுக்க வேண்டும். நீங்கள் வழங்கிய ஆதார் விவரம் EPFO அமைப்பால் சரிபார்க்கப்பட்ட பின்னர் பிஎஃப் கணக்குடன் ஆதார் இணைக்கப்பட்டுவிடும்.

newstm.in

Trending News

Latest News

You May Like