1. Home
  2. தமிழ்நாடு

நீர்ப்பற்றாக்குறை ஏற்படும் அபாயம்..! நிலத்தடி நீர்மட்டம் கடந்த ஆண்டு காட்டிலும் மிகவும் குறைந்துள்ளது..!

1

 கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும் தமிழகத்தில் 26 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் நீர்ப்பற்றாக்குறை ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

அதேவேளையில், 11 மாவட்டங்களில், நிலத்தடி நீர்மட்ட அளவானது சற்றே அதிகரித்துள்ளது.மேற்கு மாவட்டங்கள் சிலவற்றில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகச் சரிந்துள்ளது. பெரம்பலூர், திருச்சி, திருப்பூர் மாவட்டங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ளது.சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் சராசரியாக 0.5 மீட்டராகக் குறைந்திருப்பது தரவுகளின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.

தெற்கு மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகரில் கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத்தில் பெய்த கனமழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது. ஆச்சரியப்படும் வகையில் தருமபுரியில் சராசரி நிலத்தடி நீர்மட்டம் நல்ல முறையில் அதிகரித்துள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் நல்ல மழை பெய்திருந்தபோதும், மேட்டூர் உள்ளிட்ட பல முக்கிய நீர்ஆதாரங்கள் வறண்டுவிட்டன. இதற்கு சீரான நீர்வள மேம்பாடு செய்யப்படாததே காரணம் என்று கூறப்பட்டது.ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் நீர் மேலாண்மைக்கு ஒதுக்கப்பட்ட தொகையைக் காட்டிலும் குறைவாகவே தமிழகத்தில் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் சிலர் குறைகூறுகிறார்கள்.

Trending News

Latest News

You May Like