1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் அதிகரித்துள்ள தக்காளி விலை!!

மீண்டும் அதிகரித்துள்ள தக்காளி விலை!!


சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் தக்காளி விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது . இதன் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து அதன் விலையும் அதிகரித்தது. இதனால் சாமானியர்கள் பெரும் கலக்கம் அடைந்தனர்.

கடந்த இரண்டு நாட்களாக தக்காளி விலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விலை குறைந்தது. பண்ணை பசுமை கடைகளில் தமிழக அரசு சார்பாக கிலோ 40 ரூபாய் வரை தக்காளி விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

மீண்டும் அதிகரித்துள்ள தக்காளி விலை!!

இந்நிலையில் கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இன்று ரூ.70 முதல் ரூ.75 வரை உயர்ந்துள்ளது. போக்குவரத்து பிரச்னை, பெட்ரோல் விலை ஏற்றம், மழை உள்ளிட்ட பல காரணங்களால் தக்காளி வரத்து குறைவால் விலை உயர்வு என வணிகர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2 தினங்களாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை ரூ.60 ஆக இருந்த நிலையில் இன்று மீண்டும் ரூ.70 ஆக அதிகரித்துள்ளது. நேற்று கோயம்பேடு காய்கறி சந்தைக்கு 600 டன் தக்காளி வந்தது. இன்று 653 டன் தக்காளி வந்துள்ளது. தக்காளியின் தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like