1. Home
  2. தமிழ்நாடு

ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட ரிஷப் பந்த்..!

1

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்று வரும் ஏலத்தில் 10 அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

முதல் பிளேயராக ஸ்ரேயாஸ் அய்யர் பெயர் ஏலத்துக்கு வந்தது. அவரை ஏலம் எடுக்க கேகேஆர், டெல்லி, லக்னோ அணிகளிடையே கடும் போட்டி நிலவியது. ஆனால், கடைசியில் குதித்த பஞ்சாப் கிங்ஸ் அணி 26.27 கோடிக்கு ஸ்ரேயாஸ் அய்யரை ஏலம் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன பிளேயராக மாறினார் அவர். ஆனால் இந்த சாதனை சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை. 

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன பிளேயர் என்ற சாதனையை சில நிமிடங்களில் ரிஷப் பந்த் முறியடித்தார். 

ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட ரிஷப் பந்த்: இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்தும் ஏலத்தில் பங்கேற்றுள்ளார். அவரது அடிப்படை விலை ரூ.2 கோடி. லக்னோ, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட அணிகள் அவரை வாங்க ஆர்வம் காட்டின. ரூ.20.75 கோடியில் இருந்த போது டெல்லி அணி ஆர்டிஎம் மூலம் அவரை வாங்க முன்வந்தது. அப்போது ரூ.27 கோடி என விலையை லக்னோ அணி உயர்த்தியது. அதனால் டெல்லி விலக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அவரை ஏலத்தில் வாங்கியது. ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக பந்த் இப்போது அறியப்படுகிறார். அவர் அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட வாய்ப்புள்ளதாக தகவல்.

அடுத்தாக மிட்செல் ஸ்டார்க் கடந்த ஐபிஎல் தொடரில் 24 கோடி ரூபாய்க்கு ஏலம் போன அவர் இம்முறை 11.75 கோடி ரூபாய்க்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வாங்கியுள்ளது. இருப்பினும் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனை இன்னும் இவர் வசமே இருக்கிறது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 24.75 கோடி ரூபாய்க்கு ஏலம் போய் இருந்தார். 

பாட் கம்மின்ஸ் 20.50 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் அணி 2024ஏலத்தில் வாங்கியது. இப்போதைய நிலவரப்படி ஐபிஎல் வரலாற்றில் அதிகவிலைக்கு ஏலம் போன நான்காவது பிளேயர் இவர் தான். சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாகவும் இவர் இருக்கிறார். 

சாம் கரன் 18.50 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி கடந்த முறை வாங்கியது. ஐபிஎல் வரலாற்றில் 5வது அதிகபட்ச விலைக்கு ஏலம் போன பிளேயர்கள் பட்டியலில் இருக்கிறார். 

யுஸ்வேந்திர சாஹல் 18 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது. ராயல் சேலஞ்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இவரை ஏலம் எடுக்க போட்டி போட்டன. இருப்பினும் பஞ்சாப் அணி சாஹலை ஏலம் எடுப்பதில் உறுதியாக இருந்து தட்டி தூக்கியது. 

அடுத்ததாக அதிக விலைக்கு ஏலம் போன பிளேயர்கள் பட்டியில் உள்ளவர் அர்ஷ்தீப் சிங். 18 கோடி ரூபாய்க்கு இவரை பஞ்சாப் கிங்ஸ் அணி ஆர்டிஎம் செய்தது. இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட பல அணிகள் இவரை ஏலம் எடுக்க போட்டி போட்டன. 

Trending News

Latest News

You May Like