1. Home
  2. தமிழ்நாடு

ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டணம் அதிகரிப்பு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி !!

ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டணம் அதிகரிப்பு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி !!


வாடிக்கையாளர் கணக்கு வைத்திருக்காத மாற்று வங்கியின் ஏடிஎம் மையத்திலோ அல்லது ஏடிஎம் ஆபிரேட்டர்களின் மையத்திலோ பணம் எடுப்பதற்கான கட்டணத்தை உயர்த்த இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இந்த புதிய உத்தரவு வரும் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா தொற்று அச்சுறுத்தலால் வங்கிகள் குறைந்த நேரமே இயங்கி வருகின்றன. இதனால் வங்கியில் இருந்து பணம் எடுக்க அனைவரும் ஏடிஎம்- களை நம்பி மக்கள் உள்ளனர். மேலும் கணக்கில் பணம் இருப்பு, கணக்கு விவரம், மினி ஸ்டேட்மெண்ட் உள்ளிட்ட அனைத்தையும் ஏடிஎம் மூலமே தெரிந்துகொள்ளவேண்டிய நிலை உள்ளது.

ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டணம் அதிகரிப்பு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி !!

இந்தநிலையில் ஏற்படும் செலவுகளை ஈடுகட்ட வங்கிகள் ஏடிஎம்- களில் பணம் எடுப்போரிடம் இருந்து கட்டணம் வசூலிக்கலாம் என ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. தற்போது வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் ஏடிஎம்- களில் இருந்து 5 முறை பணம் எடுப்பது உள்ளிட்ட சேவைகளைக் கட்டணமின்றி பெற முடியும்.அதற்கு மேல் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் ரூ.21 வசூலிக்கலாம் என ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளது.

வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தில் 15 ரூபாயை தற்போது Interchange கட்டணமாக மாற்று வங்கி அல்லது ஏடிஎம் ஆப்பிரேட்டார்களுக்கு சம்மந்தப்பட்ட வங்கிகள் கட்டணமாக கொடுத்து வருகின்றனர். இதனை இனி வணிகள் 17 ரூபாய்க கொடுக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதே போல பணம் சாராத ஏடிஎம் பரிவர்த்தனைக்கான கட்டணம் 5 ரூபாயிலிருந்து 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டணம் அதிகரிப்பு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி !!

மாற்று வங்கி ஏடிஎம்களில் மூன்று இலவச பரிவர்த்தனைகளுக்கு பிறகு இந்த கட்டணம் வசூலிக்கப்படும். மெட்ரோ எல்லைக்குள் வராத பகுதிகளில் இந்த எண்ணிக்கை ஐந்து இலவச பரிவர்த்தனையாக உள்ளது. ஏடிஎம் பராமரிப்பு செலவை கருத்தில் கொண்டு இந்த கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள இலவச ஏடிஎம் பண பரிவர்த்தனையை கடந்தவுடன் 20 ரூபாய் சம்மந்தப்பட்ட வாடிக்கையாளரிடம் இருந்து வங்கி வசூலித்து வருகிறது. இதனை 21 ரூபாயாக வரும் வரும் ஆகஸ்ட் 1 முதல் இனி வங்கிகள் வசூல் செய்ய உள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like