1. Home
  2. தமிழ்நாடு

முதல்வர் மீது தாக்குதல் - துப்பு கொடுப்பவருக்கு சன்மானம்..!

1

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆந்திர முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் கடந்த (ஏப்.13) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த ஜெகன் மோகன் மீது மர்ம நபர் ஒருவர் தூரத்திலிருந்து கல்லை வீசி தாக்கினார். அந்த கல் ஜெகன் மோகனின் புருவத்துக்கு சற்று மேல பட்டதில், அவருக்கு சிறிய ரத்தக் காயம் ஏற்பட்டது.

அருகில் இருந்த அதிகாரிகள் முதல்வர் ஜெகன் மோகனுக்கு உடனடியாக முதலுதவி செய்தனர். ஜெகன் மோகன் ரெட்டி நெற்றியில் காயத்துடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல் வீசிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இருப்பினும் இது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல் வீசியவர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என ஆந்திர மாநில காவல்துறை அறிவித்துள்ளது. கல் வீசிய மர்ம நபரை பிடிப்பதற்காக 6 தனிப்படை அமைக்கப்பட்டது. 3 நாட்களாக முயன்றும், மர்ம நபரை பிடிக்க முடியாத நிலையில் ஆந்திர போலீஸ் சன்மானம் அறிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like