1. Home
  2. தமிழ்நாடு

இந்த மாதம் முதல் டாஸ்மாக்கில் இந்த திட்டம் தொடங்க வாய்ப்பு..!

1

மது அருந்துபவர்கள் மது பாட்டில்களை சாலைகளில் வீசி செல்வதால் மனிதர்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. இதை தடுக்கும் விதமாக காலி மது பாட்டில்களை மதுக்கடையில் திரும்பப் பெறும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி, டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் வனப்பகுதிகள் மற்றும் மலைப்பிரதேசங்களில் அமைந்துள்ள சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காலி மதுபானப் பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின்படி மதுபானத்தின் விலையை விடக் கூடுதலாக பத்து ரூபாய் செலுத்தி மதுபானப் பாட்டில்களை வாங்கிவிட்டு அதன் பின்னர் காலி மதுபானப் பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் திரும்ப ஒப்படைக்கும்போது கூடுதலாக வசூலிக்கப்பட்ட 10 ரூபாயைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்பதாகும்.

இந்த திட்டம் வனம் மற்றும் மலைப்பகுதிகளில் தற்போது செயல்பட்டு வருகிறது.. பெரம்பலூர், நீலகிரி, கோவை, திருவாரூர், நாகை, தேனி, தர்மபுரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. எனினும், டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதத்திற்குள் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

ஆகையால் இந்த மாதம் முதல் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் அமல்படும் என தெரிகிறது 

Trending News

Latest News

You May Like