குண்டுகள் முழங்க எஸ்பிபி உடலுக்கு மரியாதை... சிவாஜிக்கு பிறகு எஸ்.பி.பி. தான்

எஸ்பிபியின் உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. எனவே, தமிழகக் காவல்துறையின் ஆயுதப் படையினர் அணிவகுத்து துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்திய பிறகு பாலசுப்பிரமணியத்தின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.
முன்னதாக திரையுலகில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது எஸ்பிபியை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேபோல, எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில், கர்நாடகா அரசு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவித்தது. இதையொட்டி அங்கு அரசு கட்டடங்களில் உள்ள தேசிய மூவர்ண கொடி அரை கம்பத்தில் வெள்ளிக்கிழமை பறக்க விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எஸ்.பி.பி.யின் மறைவு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை கண்ணீர் கடலில் மூழ்கடித்துள்ளது.உங்கள் குரல் காற்றில் என்றென்றைக்கும் ஒலித்து கொண்டே இருக்கும் பாலு சார்!
newstm.in