அரசு பேருந்தில் முன்பதிவு.. குலுக்கல் பரிசு...10,000 பரிசு..!
குறைந்த கட்டணத்தில் வெளியூர் செல்வதற்கு பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்ப்பது அரசு பேருந்துகளை தான்.
குறிப்பாக தீபாவளி, பொங்கல், ரம்ஜான், புத்தாண்டு போன்ற காலங்களில் தனியார் பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் விமான கட்டணத்திற்கு இணையாக இருந்தாலும் அரசு பேருந்துகளிலோ மக்கள் எப்போதும் பயன்படுத்தும் குறைவான கட்டணத்திலையே இயக்கப்படும்.
கடந்த தீபாவளி பண்டிகையையொட்டி இதுவரை இல்லாத அளவிற்கு பல லட்சம் பயணிகள் அரசு பேருந்தில் பயணம் செய்தனர். மேலும் அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் பரிசும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் படி, இரு சக்கர வாகனம், எல்இடி டிவி, ஃபிரிட்ஜ் போன்ற பரிசுகளை அறிவித்துள்ளது. வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் பயணம் செய்பவர்களுக்குப் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.