1. Home
  2. தமிழ்நாடு

பொறியியல் மாணவர்களுக்கு மறுதேர்வு...

பொறியியல் மாணவர்களுக்கு மறுதேர்வு...


அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை தொழில்நுட்பக் கல்லூரி (எம்ஐடி), கட்டிடக்கலை மற்றும் திட்டமிடுதல் பள்ளி ஆகிய 4 வளாகக் கல்லூரிகள் செயல்படுகின்றன.

இந்தக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர்- டிசம்பரில் நடத்தவேண்டிய பருவத்தேர்வு கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், அந்த தேர்வுகள் கடந்த பிப்ரவரி - மார்ச் மாதங்களில் இணையவழியில் நடத்தப்பட்டன.

அப்போது, தேர்வில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக வளாகக் கல்லூரியில் பயிலும் பல மாணவர்களால் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும், தேர்வை எழுதாத மாணவர்களுக்கும் மே 3-ம் தேதி மறுதேர்வு நடத்தத் திட்டமிடப்பட்டது. இதற்கிடையே கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்ததாலும், ஆசிரியர்கள் கல்வி நிறுவனங்களுக்கு நேரில் வரக்கூடாது என்று தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியதாலும் மறுதேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், வளாக கல்லூரிகளுக்கான மறுதேர்வு மே 17-ம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல கடந்த பருவத் தேர்வுகளில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கும் மே 17-ம் தேதி முதல் தேர்வுகள் தொடங்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.

இந்நிலையில், பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. அதில், வரும் 14-ம் தேதி முதல் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் 21-ம் தேதி முதல் நடைபெறும். அரியர் மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூலை 17-ம் தேதி முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like