1. Home
  2. தமிழ்நாடு

கோவை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்..! இனி விலங்குகள் மோதல்களை தவிர்க்க A.I. தொழில்நுட்பம்..!

1

யானைகள் வலம் வரும் பகுதிகளை மனிதர்கள் பயன்படுத்துதல், வனப்பகுதிகளுக்குள் மனிதர்கள் அத்துமீறி நுழைதல், வனத்திற்குள் தண்ணீர் குறைவால் யானை ஊருக்குள் வருதல், யானை வழக்கமாக செல்லும் பாதையை தடை செய்தல், யானைகளை கண்டால் அருகில் சென்று செலஃபீ எடுத்தல் போன்ற காரணங்கள் மனித, விலங்குகள் மோதல்களுக்கு ஒரு காரணமாக அமைகிறது.

இதை குறைக்கவும், தவிர்க்கவும் A.I. எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு ஒரு கண்காணிப்பு அமைப்பை கோவை அமிர்தா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர்.

'அமிர்தா எலிபாண்ட் வாட்ச்' (Amrita Elephant Watch) என பெயரிடப்பட்டுள்ள இந்த அமைப்பு, வனப்பகுதி அருகே அமைந்துள்ள கண்காணிப்பு காமெராவில் பதிவாகும் CCTV காணொளி கவனித்து, இதற்கென உருவாக்கப்பட்டுள்ள அல்காரிதம் மூலம் வனத்தில் ஏற்படும் அசைவுகள் யானைகளால் ஏற்படுகின்றனவா எனவும், அது யானை தான என்பதை CCTV காட்சி மூலம்  ஆராய்ந்து, அதை சுற்றியுள்ள விவசாயிகளுக்கும், வனத்துறையினருக்கு அவர்களின் மொபைல் போன் மூலம் செய்தி அனுப்பும் (Alert Notification).

அது எப்படி யானைகள் தான் என கண்டறிய முடியும்?

A.I. அமைப்பில் இதுவரை 1.5 லட்சத்திற்கும் அதிகமான வனத்திற்குள் இருக்கும் யானைகளின் புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டு  உள்ளது. இதை கொண்டு அதற்கு யானையை கண்டறியக்கூடிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவல்கள் காலை முதல் இரவு நேரம் வரை யானைகளின் அசைவுகளை மையப்படுத்தி இருக்கும். இது அந்த A.I. அமைப்புக்குள் சேர்க்கப்பட்டு அதன் மூலம் யானையை கண்டறிய அதற்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கண்காணிப்பு கமெராக்கள் சூரிய ஒளி மூலம் இயங்குகின்றன. இரவு நேரங்களில் யானைகளை கண்டறிய இன்ஃபிரா ரெட் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

யானையை கண்ட 15-20 வினாடிகளில் நெடு தூர அகல நெட்ஒர்க் (LoRaWAN) என்று அழைக்கப்படும் நெட்ஒர்க் வழியே அப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பமுடியும். இப்படி பட்ட ஒரு அமைப்பை,  அண்மையில் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளனர் இதை உருவாக்கிய பாலு மோகன் தாஸ் மேனன் மற்றும் குழுவினர்.
 

Trending News

Latest News

You May Like