1. Home
  2. தமிழ்நாடு

தமிழிசை கோரிக்கை..! வார்த்தைகள் கடுமையாக இருக்க வேண்டாம்..!

1

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையான விமர்சித்துப் பேசியிருந்தார். இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசையிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் நாசூக்காகவே பேசியிருந்தார்.இன்னொரு தலைவரின் சொற்பொழிவுக்கு நான் பதில் சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன். அவரவர்களுக்கு என்று ஒரு பாணி இருக்கும். அவர் பேசிய மேடையில் நான் இருந்தேன்,  கட்சித்தலைவர் என்ன சொன்னார் என்று கேட்டால், அவரவருக்கு என்று ஒரு பாணி இருக்கும். இது அவரது பாணி. அவ்வளவுதான்.

தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதை கொடுக்க வேண்டும். ஒரு மாநில தலைவருக்கு என்ன மரியாதை கொடுக்கிறோமோ அந்த மரியாதையை எதிர்க்கட்சித் தலைவருக்கும் கொடுக்க வேண்டும். மாநில தலைவருக்கு மரியாதை கொடுக்கிறேன் என்றால் அது அவரது பாணி என்று கடந்து சென்றுவிடுவேன். மற்ற தலைவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றால் வார்த்தைகள் சற்று கடுமையாக இருக்க வேண்டாம் என்பது என் கோரிக்கை என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like