இன்று முதல் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை..!

குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை 17, 18, 20, 21 ஆகிய தேதிகளில் கடமைப் பாதையில் நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனால் கடமைப்பாதை - ரபி மார்க் கிராசிங், கடமைப்பாதை - ஜன்பத் கிராசிங், கடமைப்பாதை - மான்சிங் சாலை கிராசிங், கடமைப்பாதை - சி- ஹெக்ஸாகன் ஆகிய இடங்களில் காலை 10:15 மணி முதல் பகல் 12:30 மணி வரை போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
வடக்கு டில்லியில் இருந்து தெற்கு டில்லிக்கும் தெற்கு டில்லியில் இருந்து வடக்கு டில்லிக்கும் செல்லும் மக்கள் ரிங் ரோடு, சராய் காலே கான், ஐ.பி., மேம்பாலம், ராஜ்காட், லஜ்பத் ரால் மார்க், மதுரா சாலை, பைரோன் சாலை, ரிங் ரோடு, அரவிந்தோ மார்க், சப்தர்ஜங் சாலை, கமல் அட்டாதுர்க் மார்க், கௌடிலயா மார்க் வழியே செல்லலாம்.
அதேபோல் கிழக்கு டில்லியில் இருந்து தென்மேற்கு டில்லிக்கு செல்பவர்கள், ரிங் ரோடு வந்தே மாதரம் மார்க்கைப் பயன்படுத்தலாம்.
வினய் மார்க், சாந்தி பாத், புதுடில்லி மற்றும் அதற்கு அப்பால் செல்லும் வாகன ஓட்டிகள், சர்தார் படேல் மார்க், மதர் தெரசா கிரசண்ட், ரவுண்டானா ஆர்.எம்.எல்., பாபா கரக் சிங் மார்க் அல்லது பார்க் ஸ்ட்ரீட் - மந்திர் மார்க் ஆகியவற்றைப் பயன்படுத்தி வடக்கு டில்லி அல்லது புதுடில்லிக்குச் செல்லலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.