1. Home
  2. தமிழ்நாடு

ஒரு முறை வாக்களித்தால் பாஜகவிற்கு இரண்டு வாக்குகள் பதிவானதாக வந்த செய்தி உண்மை இல்லை..!

1

நாளை முதல் ஜூன் 1 வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கேரளத்தில் ஏப்ரல் 26 அன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

தேர்தலுக்கு முன்னதாக காசர்கோடு மக்களவைத் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரிசோதிக்கப்பட்டு, மாதிரி வாக்குப்பதிவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதைத் தொடர்ந்து நேற்று பல்வேறு அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றது.

ஒவ்வொரு வாக்குப் பதிவு இயந்திரத்திலும் நோட்டாவைச் சேர்த்து மொத்தம் 10 சின்னங்கள் பொருத்தப்பட்டு முதற்கட்டமாக அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதைத் தொடர்ந்து மாதிரி வாக்குப் பதிவின்போது ஒருமுறை தாமரை சின்னத்தில் அழுத்தினால் இரண்டு வாக்குகள் பதிவானதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தனர்.

மேலும், 4 இயந்திரங்களில் இந்த கோளாறு இருந்ததாகவும், வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள காங்கிரஸின் சின்னம் மற்றதைவிட சிறியதாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. எனவே உடனடியாக அதனை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதன் பிறகு இந்தப் புகாரை விசாரிக்கும்படி தேர்தல் ஆணையத்தை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து இரண்டு வாக்குகள் பதிவானதாக வந்த செய்தி உண்மை இல்லை எனவும் இது குறித்த விரிவான தகவல்களை நீதிமன்றத்தில் சமர்பிப்போம் என மூத்த துணை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like