திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலம் பழுது..!

பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்தார்.
ஹைட்ராலிக் முறையில் இயங்கும் இந்தப் புதிய ரயில் பாலம் கப்பல் செல்கையில் செங்குத்தான நிலையில் 24 கயிறுகளைக் கொண்டு தூக்கப்படுகிறது.
இந்த நிலையில், செங்குத்து பாலத்தை இறக்கும்போது பழுது ஏற்பட்டு பாலம் கோணலாக நிற்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாலத்தில் பழுது ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ள அதிகாரிகள் பழுதை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த சிறிது நேரத்திலேயே பாலம் பழுதடைந்ததால் எதிர்க் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.