கழற்றப்பட்ட போல்ட்டுகள்...ரயில் விபத்து திட்டமிட்ட சதி..?
கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நேரிட்ட தண்டவாளத்தில் போல்ட்டுகள் கழற்றப்பட்டதாக என்.ஐ.ஏ. தகவல் அளித்துள்ளது.
விபத்து ஏற்பட்ட இடத்தில் என்.ஐ.ஏ. எஸ்.பி. ஸ்ரீஜித் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தண்டவாளத்தில் போல்ட்டுகள் கழற்றப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொன்னேரி ரயில் நிலையத்தில் ஜூலை 26, செப்.16, 21 ஆகிய தேதிகளில் இதேபோன்று போல்ட்டுகள் கழற்றப்பட்டதாகவும் NIA தெரிவித்துள்ளது.
ரெயில் விபத்து தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக கவரப்பேட்டை ஸ்டேஷன் மாஸ்டர், லோகோ பைலட், உதவி லோகோ பைலட், கவரப்பேட்டை சிக்னல் ஆப்பரேட்டர்கள் உள்ளிட்ட 13 பிரிவு அதிகாரிகளுக்கு தெற்கு ரெயில்வே சம்மன் அனுப்பியுள்ளது. இவர்கள் இன்று மாலை தெற்கு ரெயில்வே அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.