1. Home
  2. தமிழ்நாடு

பாரதமாதா சிலை அகற்றம்: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கண்டனம்..!

1

 தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- 

விருதுநகர் மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் நிறுவப்பட்டிருந்த பாரத அன்னையின் சிலையை சுவர் ஏறிக் குதித்து காவல் துறையினர்  அப்புறப்படுத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சியில், ஒரு கட்சிக்கு சொந்தமான இடத்தில் பாரத அன்னைக்கு சிலை வைப்பதற்குக் கூட உரிமை இல்லாத சூழலே நிலவி வருகிறது. 

என் மண் என் மக்கள் யாத்திரையின் மூலமாக தி.மு.க .அரசின் அவலங்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதால் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் அச்சத்தின் உச்சியில் இருப்பதன் வெளிப்பாடே இந்த நடவடிக்கை. பாரத அன்னையின் புகழ் ஓங்குக. இவ்வாறு அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.


 

Trending News

Latest News

You May Like