1. Home
  2. தமிழ்நாடு

14 வகையான  தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் !! தமிழக அரசு அதிரடி உத்தரவு

14 வகையான  தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் !! தமிழக அரசு அதிரடி உத்தரவு


கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில்  பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் அதிகளவு பரவி வருகிறது. கொரோனா பாதிப்பில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது. அதன் பரவலை கட்டுப்படுத்த 2ம் கட்ட ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதனால், மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு அத்யாவசிய தேவைகளுக்கு தமிழக அரசு நிவாரணமும், சலுகைகளையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில், மீனவர்கள், பட்டாசு தொழிலாளர்கள், திருநங்கை, சினிமா ஊழியர்கள் உள்ளிட்ட 14 வகையான  தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்து இருக்கிறது.

அதற்கான அரசாணை வெளியிட்டப்பட்டு உள்ளது. அந்த அரசாணையில்,  வாரியத்தில் பதிவு செய்துள்ள 8.60 லட்சம் பேருக்கு ரூ.86 கோடி நிதி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newstm.in

Trending News

Latest News

You May Like