ஜனவரி 23-ல் வெளியாகும் விடாமுயற்சி திரைப்படம்..?
நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீட்டிலிருந்து விலகியதால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். துணிவு திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அஜித் படத்திற்காக மிக ஆவலாக அவரின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
குட் பேட் அக்லி ஏப். 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் விடாமுயற்சி வெளியீடு குறித்து கேள்விகள் எழுந்த நிலையில், விடாமுயற்சி திரைப்படத்தை ஜனவரி இறுதியில் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், 'விடாமுயற்சி' திரைப்படம் ஜன.23ம் தேதி வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.